jeevan jeevan Author
Title: விலைவாசி: வாக்காளர் கடமை முடியவில்லை...
Author: jeevan
Rating 5 of 5 Des:
தேர்தலும் முடிந்துவிட்டது. மே 13 வரை அதி காரபூர்வமான அறிவிப்புக்கு காத்திருக்க வேண் டும். ஆயினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை ச...

தேர்தலும் முடிந்துவிட்டது. மே 13 வரை அதி காரபூர்வமான அறிவிப்புக்கு காத்திருக்க வேண் டும். ஆயினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை சொல்லவும்வேண்டுமோ?

     இந்தத் தேர்தலில் ஊழல், குடும்ப ஆட்சி போன்ற பிரச்சனைகள் முக்கிய இடம் பெற்றன. அதற்கு நிகராக அனைத்துப்பகுதி மக்களாலும் பேசப்பட்ட மிக முக்கியமானப் பிரச்சனை விலை உயர்வே. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற அரசின் திட்டத் தாலும் ஏறிய விலையின் சுமையை குறைக்க முடியவில்லை. இதன் வேதனையும் கோபமும் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் மக்களிடம் எதிரொலிக்கக் கண்டோம்.

  ஆட்சி மாறியதும் விலை குறைய வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. ஆனால், ரிசர்வ் வங்கி அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி அனைத்துப் பொருள்க ளின் விலையும் குறைய வாய்ப்பில் லை என்று ரிசர்வ் வங்கி ஆய்வு கூறுகிறது. குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்களின் பணவீக்கம் 11.8 விழுக்காட்டிலிருந்து 13.1ஆக உயரும் என்று அந்த ஆய்வு கண்டு சொல்லி யுள்ளது. உணவுப் பொருட் களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

  உணவுப்பொருள்களின் விலையேற்றத் திற்கு மழையும் பருவமாறுதலும்தான் காரணம் என மத்திய-மாநில ஆட்சியாளர்கள் கூறிவந்த வெற்றுச் சாக்குகள் இப்போது அம்பலமாகி விட்டன. வேளாண் விளைச்சல் அதிகரித்தா லும் உணவுப் பொருள் விலை குறையாது என ரிசர்வ் வங்கி கூறுவதின் மர்மம் என்ன?

  ஊக வணிகமும் முன்பேர வணிகமும் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின் றன. இவர்களின் லாப வெறிக்கு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பலியாகிறார்கள். வாங்கிச் சாப்பிடும் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்படு கிறார்கள். வெங்கா யம், கரும்பு, நெல், காய் கறிகள், தானியங்கள், பழங்கள் எதுவானாலும் அதற்கு உரிய நியாய மான கட்டுப்படியான விலை விவசாயிக்குக் கிடைக்காது. ஊக வணிகர்களும் முன்பேர வணிகர்களும் முன்கூட்டியே பேரம் பேசி கடன் கொடுத்து தவிட்டு விலை நிர்ணயித்து விடுகிறார்கள். இதனால் விவசாயி ஓட்டாண்டி ஆகிறான். உழுபவன் கணக்குப்பார்த்து உழக்கு கூட மிஞ்சாமல் வேதனைக் கண்ணீர் வடிக்கி றான். ஆனால், பொருளையே பார்க்காமல் கம்ப் யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டு வர்த்தகம் நடத்தும் சூதாடிகள் பல்லாயிரம் கோடி கொள் ளையடிக்கிறார்கள். இதைத் தடுக்காமல், வெறும் வார்த்தைகளால் விலைவாசியை ஒருபோதும் குறைக்க முடியாது.

  அதுபோல அரசின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கை உள்நாட்டு விவசாயிகள் நலன் மற் றும் பொதுமக்கள் நலன் இரண்டையும் சார்ந் திருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் கோர லாபப் பசிக்கு உள்நாட்டு விவசாயிகளை வஞ் சித்து, வேளாண் பொருட்களை கொட்டிக் கொடுக்கும் கொடுமைதான் தொடர்கிறது. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் விலைவாசி அரக்கனின் உடும்புப் பிடியிலிருந்து மீளமுடியாமல்தவிக்கிறார்கள்.

  நாடு தழுவிய மக்களின் மாபெரும் போராட்ட எழுச்சிதான் இந்தத் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளை திருத்தி அமைக்கும் ஒரே வழி. விலைவாசி குறைய வாக்களித்ததோடு வாக்கா ளர் கடமை முடியவில்லை, வீதியில் கோடிக்கால் பூதமாய் திரண்டெழுந்து போராடவும் தயாராக வேண்டும். அதுவும் ஜனநாயகக் கடமையே.
thanks  தீக்கதிர் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top