மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்து திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட கோவிந்தசாமிக்கு, அத்தொகுதி மக்கள் மிகச் சரியான பதிலடியைக் கொடுத்து விரட்டியுள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் என்ற பெருமையை கோவிந்தசாமி பெற்றுள்ளார்.
திருப்பூர் தொகுதி வடக்கு என்று பிரிக்கப்படும் முன்பு அத்தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் கோவிந்தசாமி. ஆனால் தனது பதவிக்காலத்தின் கடைசியில் அவர் திமுகவுக்கு ஆதரவாக மாறினார். கட்சிக்குள் இருந்து கொண்டே திமுககாரர் போல செயல்பட்டார். பெருமளவில் பணம் வாங்கி விட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் திமுகவுக்குத் தாவி திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் கறிப்பிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதிபடக் கூறியிருந்தனர். தற்போது அது நடந்து விட்டது.
இத்தேர்தலில் கோவிந்தசாமியை, அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்த், 73,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி படு தோல்வி அடையச் செய்துள்ளார்.
மேலும் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்ட வேட்பாளர் என்ற பெயரும் கோவிந்தசாமிக்குக் கிடைத்துள்ளது.
கோவிந்தசாமிக்கு வெறும் 40,369 ஓட்டு மட்டுமே கிடைத்தது. ஆனந்த்துக்கு 1,13,640 ஓட்டுக்கள் கிடைத்தன.
இதேபோல கட்சி மாறிப் போட்டியிட்ட பலருக்கும் மரண அடி கொடுத்துள்ளனர் வாக்காளர்கள்.
மண்ணைக் கவ்விய முத்துச்சாமி-சேகர்பாபு
அதிமுகவுக்கு நேரம் சரியில்லாமல் இருந்தபோது கட்சியை விட்டு ஓடி திமுகவில் அடைக்கலம் புகுந்தவர்கள் முத்துச்சாமி,ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக இருந்த பி.கே.சேகர்பாபு ஆகியோர்.
இவர்களில் அனிதாவைத் தவிர மற்ற இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
ஈரோட்டில் முத்துச்சாமி, தேமுதிகவிடம் மண்ணைக் கவ்வினார். ஆர்.கே.நகரில் அதிமுகவின் வெற்றிவேலிடம் மண்ணைக் கவ்வினார் சேகர்பாபு.
அதேபோல மதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தூக்கப்பட்டவர்கள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன்.
இவர்களில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்ட கண்ணப்பன் படு தோல்வி அடைந்தார்.
தாவிக் குதித்த கு ப கிருஷ்ணன், சரத்குமார் இருவரும் வெற்றி பெற்று உள்ளனரா, ஆச்சர்யம்.
பதிலளிநீக்குஅதிக வாக்குகள் வித்தியாசம் சோளிங்கநல்லூர் 76500+