jeevan jeevan Author
Title: திகார் : அடுத்த ரவுண்டுக்கு ஆளு ரெடி! : தயாநிதி , ராசாத்தி
Author: jeevan
Rating 5 of 5 Des:
ரூ .1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு நாட்டு மக்க ளின் பணம் சூறையாடப்பட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மூன் றாவது குற்றப்பத்திரி...


ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு நாட்டு மக்க ளின் பணம் சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மூன் றாவது குற்றப்பத்திரிகையை ஜூன் மாத இறுதியில் மத்திய குற்றப்புலனாய்வுக்கழகம் (சிபிஐ) தாக்கல் செய்கிறது. இதில், காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் முதலாம் ஆட்சிக்கா லத்தில் தொலைத்தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக வும், தற்போது மத்திய ஜவுளித் துறை அமைச்சராகவும் உள்ள திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனும் சிக்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 அதுமட்டுமின்றி மூன்றா வது குற்றப்பத்திரிகையில் அர சியல் இடைத்தரகர் நீரா ராடியா, அவர் மூலம் டாடா நிறுவனத் திடம் நிலம் கைமாறு பெற்ற தாக கூறப்படும் கனி மொழி யின் தாயார் ராசாத்தி அம்மாள் உள்பட பலரது பெயரும் இடம் பெறக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடை பெற்று வருகிறது. இந்த வழக் கில் சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் பல்வேறு கோணங்க ளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையின் ஒரு கட்டமாக சிறப்பு நீதிமன் றத்தில் இரண்டு குற்றப்பத்திரி கைகளை சிபிஐ தாக்கல் செய் துள்ளது. அந்தக்குற்றப்பத்திரி கைகளின் அடிப்படையில் முன்னாள் தொலைத்தொடர் புத்துறை அமைச்சர் .ராசா, கனிமொழி எம்.பி., உள்பட 13 முக்கிய நபர்கள் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில், இந்த ஊழ லின் அடுத்தக்கட்ட விசார ணையை சிபிஐயும் அமலாக் கப்பிரிவும் தீவிரப்படுத்தியுள் ளன. இதுதொடர்பாக சனிக் கிழமை சிஎன்பிசி-டிவி18 சேன லில், அதன் பொருளாதார பிரிவு ஆசிரியர் சித்தார்த் ஜராபி அளித்த செய்தியில், ஜூன் மாத இறுதியில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிகை யை சிபிஐ தாக்கல் செய்யும் என்றும், இதில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக சிபிஐ வட்டா ரங்களை மேற்கோள் காட்டிய அவர், விசாரணை வளையத்தி லிருந்து எந்த ஒரு பெரும் புள்ளியும் தப்பமுடியாது என் பதில் சிபிஐ கவனமாக இருப் பது தெரிகிறது என்றும் குறிப் பிட்டார்.
 மூன்றாவது குற்றப்பத்திரி கையில் மேலும் பல முக்கிய நிறுவனங்கள், முக்கிய நபர் கள், அவர்களோடு தொடர் புடைய நாடுகள் உட்பட பெரும் பட்டியல் இடம்பெறக் கூடும் என்று குறிப்பிட்ட சித் தார்த் ஜராபி, மொரீசியஸ் நாட் டின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, ஸ்பெக்ட்ரம் ஊழ லில் ஈடுபட்டு பெரும் கொள் ளையடித்த நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்து வதற்காக சிபிஐ மற்றும் அம லாக்கப்பிரிவின் தலா 2 அதி காரிகள் கொண்ட 4 பேர் குழு ஒன்று அந்நாட்டிற்கு சென் றுள்ளது என்றும் தெரிவித் தார். 10 நாட்கள் கழித்து இந்த குழு திரும்பி வரும் என்றும், அப்போது மேலும் கூடுதலான ஆதாரங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மூன்றா வது குற்றப்பத்திரிகையில், லூப் டெலிகாம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உறுதியாக இடம்பெறுவதற்கான வாய்ப்பு கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
 மூன்றாவது குற்றப்பத்திரி கையில் குறிப்பாக 2008ம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனைத்து அலைக்கற்றை உரிமங்கள் தொடர்பாகவும் விரிவான விசாரணை இருக் கும் என்றும், 2001ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி முதல் அளிக் கப்பட்ட அனைத்து அலைக் கற்றை உரிமங்கள் குறித்த விபரங்களும் தீவிர விசாரணை வளையத்திற்குள் இருக்கின் றன என்றும் சிஎன்பிசி-டிவி செய்தி தெரிவிக்கிறது. இந்த விபரங்கள் குறித்து மேலும் முழுமையாக விசாரிக்க வேண் டிய நிலை உள்ளது என்று சிபிஐ கருதுகிறது. எனவே முழுமையான விசாரணை விப ரங்களுடன் ஆகஸ்ட் மாதத் தில் 4வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகி றது. அநேகமாக அது இந்த ஊழல் வழக்கில் கடைசிக் குற் றப்பத்திரிகையாக இருக்கக் கூடும்.
 நான்கு குற்றப்பத்திரிகைக ளும் முழுமையடையும் போது திகார் சிறையில் தற்போது இருப்பவர்களோடு மேலும் பல முக்கிய புள்ளிகள் அடைக் கப்பட்டிருப்பார்கள் என்றும் சித்தார்த் ஜராபி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.
 சன் டிடிஎச்; ரூ.830 கோடி
 இதனிடையே, இந்த குறிப் பிட்ட காலகட்டத்தில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன் மேற்கொண்ட செயல்கள் என்ன என்பது குறித்தும் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருவதாகவும், அது குறித்த விவரங்கள் மூன்றாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெறலாம் என்றும் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஏர்செல் தொலை பேசி நிறுவனத்தின் உரிமை கைமாறியதில் தயாநிதி மாற னின் பங்கு குறித்து சிபிஐ விசா ரித்து வருகிறது. மேலும் மாறன் குடும்பத்தினருக்கு சொந்த மான சன் டிடிஎச் நிறுவனத் தில் ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க் என்ற நிறுவனம் ரூ.830 கோடி முதலீடு செய்துள் ளது. இது, தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத் தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்காக பெறப் பட்ட லஞ்சப்பணமா என்பது குறித்தும் விசாரணை வளை யம் விரிவடைந்துள்ளது. எனவே மூன்றாவது குற்றப்பத்திரிகை யில் தயாநிதி மாறனும் சிக்குவார் என்று தெரிகிறது. (.நி.)
செய்தி : தீக்கதிர்

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top