சென்னை,பிப்.15-
உழைப்பாளி மக்களின் வாழ்க்கை தரத்தை மீட்டெ டுக்க பிப்.20-21 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 80 லட்சம் அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் வெள்ளியன்று (பிப்.15) சென்னையில் செய்தியாளர் களிடம் கூறியது வருமாறு: புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக மக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்குநாள் வீழ்ந்து கொண்டே போகிறது. விலை வாசி உயர்வை கட்டுப் படுத்த முடியாத ராணியற்ற தாக மத்திய அரசு உள்ளது. பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனு மதித்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், அத்தியாவசியப் பொருட் களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. மக்கள் நல அரசாக இருக்க வேண்டிய மத்திய அரசு மக்கள் விரோத அர சாக பரிணமித்துள்ளது. புதிய வேலைவாய்ப்புக் களை உருவாக்காமல், இருக் கிற வேலை வாய்ப்பை களையும் அரசு பறித்து வரு கிறது. அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப் பாததால் சாதாரண விளிம்பு நிலை மக்களின் வேலை வாய்ப்புகள் அதிகளவு பறிக் கப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லா திண்டாட் டம் அபாயகரமான எல் லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிரந்தரப் பணிகளில் தவிர்க்க முடியாமல் அத்துக் கூலி ஒப்பந்த, தினக்கூலி, மதிப்பூதியம் போன்ற பெயர் களில் ஊழியர்களை நியமிக் கின்றனர். அரசு பணிகளை தனியாருக்கு கொடுக்கின் றனர். இதனால் நிரந்தர ஊழி யர்களுக்கு இணையாக இத் தகைய ஊழியர்கள் உள்ள னர். பன்னாட்டு, பெரு நிறு வனங்களைப் போன்று அரசுகளும் உழைப்பு சுரண் டலில் ஈடுபடுகிறது. ஊழியர்களின் ஓய்வூதி யம் பறிக்கப்பட்டு, அதனை பன்னாட்டு பகாசுர நிறு வனங்கள் பங்குச் சந்தையில் சூதாட்டம் நடத்த அனு மதிக்கப்பட்டுள்ளது. அரச மைப்புச் சட்டம் வழங்கிய கூட்டுபேர உரிமை, தொழி லாளர் நலச்சட்டங்கள் அம லாக்கப்படுவதில்லை. பொதுத்துறை பங்குகளும், கனிம வளங்களும் தனி யாருக்கு தாரை வார்க்கப்படு கிறது. புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப் பட்ட பிறகு 14அகில இந்திய பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி விடுத்த அறைகூவ லின்படி பிப். 20-21 தேதி களில் 48 மணி நேர வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்தப்போராட்டத்தில் சம்மேளனத்தின் கீழ் உள்ள 28 மாநில அரசு ஊழியர் சங்கங்கள் முழுமையாக பங்கேற்கின்றன. நாடு முழு வதும் 80லட்சம் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத் தில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, முது நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், மூட்டா உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள்பங்கேற்கின்றனர். பிப்.4 அன்று மாநில தலைமை செயலாளர்க ளுக்கு சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த அறிக்கை கொடுக்கப்பட்டது. அதன் பிறகும் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு தொழிற்சங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து உலகமய கொள்கையை அமலாக் கினால் அவற்றை முறிய டிக்க நாடுதழுவிய வலு வான போராட்டம் நடத்து வது தவிர்க்க இயலாது. அதில் நாடு முழுவதும் உள்ள அரசுஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் எனவும் எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது சம்மேளனப் பொருளாளர் மு.அன்பரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தென் சென்னை மாவட்ட தலை வர் ராமசாமி, செயலாளர் டானியல் ஜெயசிங், வட சென்னை மாவட்டச் செய லாளர் ஜெ.பட்டாபி ஆகி யோர் உடனிருந்தனர்.
THANKS : TEEKKATHIR
|
Home
»
»Unlabelled
» பிப். 20-21 பொது வேலைநிறுத்தம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் 80 லட்சம் பேர் பங்கேற்பர்-ஆர்.முத்துசுந்தரம் தகவல்
About Author
The part time Blogger love to blog on various categories like Web Development, SEO Guide, Tips and Tricks, Android Stuff, etc including Linux Hacking Tricks and tips. A Blogger Template Designer; designed many popular themes.
Advertisement
Next
This is the most recent post.
Previous
பழைய இடுகைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக