கட்டுரையாளர் -சி.பி.கிருஷ்ணன்
|
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு
முழுவதும் உள்ள
10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி
காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு
நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில்
ஈடுபட உள்ளனர். இதற்கான அறை
கூவலை பி.இ.எஃப்.ஐ.
உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு.
விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு
ஈடுபட்டுள்ளது. இந்த
சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு
சதவீதத்திலிருந்து 10 சத
வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி
போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது.
இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம். பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும். போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும். இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது. மக்களுக்கான கடன் மறுக்கப்படும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து... தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது. ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம் க்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர். அத்துடன் * ஊழியர் விரோத - அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக! * இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக! * பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக! * பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக! * அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக! * வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக! * வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக! * வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே! * ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது. தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது. வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது. எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
பொதுச்செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு |
About Author
Advertisement

Related Posts
- உணவுப் பாதுகாப்பை உருக்குலைக்கும் சதி01 Jun 20120
கடும் விலைவாசி உயர்வால் தாக்கப்பட் டுள்ள மக்களுக்கு ஓரளவுக்கேனும் பாது...Read more »
- ஏற்பது இகழ்ச்சி அல்ல!19 Jul 20110
சமச்சீர் கல்வியை இந்தக் கல்வியாண்டு முதலாகவே அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீ...Read more »
- திட்டம் போட்டுத் திருடும் கூட்டம்...25 Jun 20110
அனைவருக்கும் கல்வி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களையும் தணிக்கை செய்ய வி...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.