உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ஆசிய மேம் பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு சர்வதேச அளவில் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 10 சத விகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வாங்கும் சக்தி குறைந்து வறுமையின் கோரப் பிடியில் கோடிக்கணக்கானோர் சிக்குவர். குறிப்பாக ஆசியா அளவில் 6.40 கோடி பேர் வறு மைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள். இந்தி யாவில் மட்டும் 3 கோடிபேர் வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கப்படுவர் என ஆசிய வளர்ச்சி வங்கி வரப்போகும் அபா யத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மேலும் வருமானத்தின் 60 சதவிகிதத்தை உணவுக்காகவே செலவிடுகின்றனர். இந்நிலை யில் மருத்துவச் செலவு மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவற்றுக்கு ஆகும் செலவும் அதி கரித்துள்ளது. இதனால் உணவு தவிர மற்ற கல்வி, மருத்துவத்திற்கு போதிய நிதி ஒதுக்க முடியாமல் சாதாரணக் குடும்பத்தின் பொருளா தாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று ஆசிய மேம்பாட்டு வளர்ச்சி வங்கியின் தலை மை பொருளாதார அறிஞர் செஞ்ச்யாங் கவலை தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் பற்றி இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவலைப்படுவதில்லை. மாறாக இந்தியாவின் வளர்ச்சி யை ஆபத்தான திசைவழியில் திருப்பிக் கொண்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் பணக்கார இந்தியா, ஏழை இந்தியாவை என்ற இருவகை இந்தியா வை திட்டமிட்டு உருவாக்கி வருகிறது. இதனை உச்சநீதி மன்றமும் குறிப்பிட்டு கண்டித்துள்ளது. இந்த ஆபத்தான போக்கு அடுத்த இலக்கை அடை வதற்கு முன்பு சரி செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசோ உணவு தானியக் கிடங்கில் தானியங்கள் வீணாகி மக்கிக் குப்பையானாலும் சரி, அல்லது எலிகள் தின்று கொழுத்தாலும் சரி அது ஏழைகளுக்குக் கிடையாது என கையை விரித்துவிட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டுக் கண்டித்த போதும் கூட, அரசின் கொள்கை விஷயத்தில் நீதி மன்றம் தலையிடக்கூடாது என நமது பிரதமர் மன்மோகன் சிங் தங்களது (காங்கிரஸ்) கொள்கையை முழக்கமிட்டார். இதுதான் இந்திய மக்களை காங்கிரஸ் தலைமையிலான அரசு காக்கும் லட்சணம்.
ஏற்கனவே இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க வழியில்லாதவர்கள் 77 சதவிகிதம் பேர் உள்ளனர் என மத்திய அரசு நியமனம் செய்த அர்ஜூன் சென்குப்தா குழு தெரிவித்திருந்தது. இதன் பின்பும் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு அடிநாதமாக விளங்கும் பெட்ரோல், டீசல் விலையை பெரும் நிறுவனங்களே தங்கள் இஷ்டத்திற்கு நிர்ணயம் செய்து கொள்ளலாம் என மத்தியஅரசு அறிவித்தது. அதன் மூலம் பெரும் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. இப்படித் தொடர்ந்து ஏழைகளின் மீது சுமை ஏற்றப்பட்டுக் கொண்டே வருகிறது. மறுபுறம் கருப்புப் பணமுதலைகளின் பெயர்களைக் கூட வெளியில் சொல்லமுடியாது என அவர்களை பாதுகாக்கிறது. இதுதான் மத் திய காங்கிரஸ் அரசின் உண்மையான வர்க்க பாசம் ஆகும்.
- நன்றி தீக்கதிர்
- நன்றி தீக்கதிர்
கருத்துரையிடுக