இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபட்ச பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு ஐநா சபை எச்சரிக்கை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஐநாவின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், "ஐநாவுக்கு எதிரான ராஜபட்சவின் சவாலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை." என்று கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"கொழும்புவில் பணியாற்றும் ஐநா கிளை அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு." என்றும் பர்ஹான் ஹக் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஐநா உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கையிடம் வழங்கப்பட்ட அறிக்கையின் தகவல்கள் வேண்டுமென்றே கசிய விடப்பட்டுள்ளது கடுமையான விஷயம்." என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மே தினத்தில் ஐநாவுக்கு எதிராக பேரணி நடத்த ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐநா சபை இவ்வாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நன்றி தினமணி
கருத்துரையிடுக