jeevan jeevan Author
Title: 2 வாரம் 6 நாட்கள், 27 மணி நேரம் 13 வக்கீல்கள் ...சமச்சீர் கல்வி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது
Author: jeevan
Rating 5 of 5 Des:
சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் விசாரணை நேற்றுடன்   முடிந்தது .  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது . பா...


சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் விசாரணை நேற்றுடன்  முடிந்ததுதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. பாட புத்தகங்களை வழங்க சுப்ரீம் கோர்ட் அடுத்த கெடு விதித்துள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், தீபக்வர்மா, சவான் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக வக்கீல்கள் அரிமா சுந்தரம், ராஜீவ் தவான், பெற்றோர் சார்பாக மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷண், ரவிவர்மா, என்.ஜி.ஆர். பிரசாத், துருவமேத்தா, விடுதலை, கே.பாலு ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். 

நேற்று இறுதி கட்ட விசாரணை  நடந்தது. அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, ‘‘இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பழைய பாடப்புத்தகங்கள் தர உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
பெற்றோர்கள் தரப்பு வக்கீல் அந்தி அர்ஜுனா பதில் அளிக்கும் போது, ‘‘சமச்சீர் கல்வி கொண்டு வர எல்லா விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு
தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது’’ என்றார்.
பி.பி.ராவ் குறுக்கிட்டு, ‘கடந்த அரசு சமச்சீர் கல்விக்கான ஒப்புதலை நிபுணர் குழு ஒரு நாள் நடந்த கூட்டத்தில் வழங்கியுள்ளதுஎன்றார். 
நீதிபதிகள் குறுக்கிட்டு, (அரசு வக்கீலை பார்த்து), ‘‘தற்போதைய அரசு ஒரே நாளில் சமச்சீர் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. நீங்கள் சட்டத்திருத்தம் ஒரே நாளில்  முடிவு செய்து சட்டசபையில் அறிமுகப்படுத்தி, அன்று மாலையே கவர்னர் ஒப்புதலும் பெற்றுள்ளீர்கள், அவர்கள் ஏன் ஒரே நாளில் பாடத்திட்டம் ஒப்புதல் வழஙகக் கூடாது. அவசர அவசரமாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு என்ன காரணம்’’ என்று கேள்வி எழுப்பினர். 
     அந்தி அர்ஜுனா பதில் அளிக்கும் போது, ‘‘தமிழக அரசு தரமற்ற பாட புத்தகம் தயாரித்துள்ளது. நீதிபதிகள் அதை ஏற்கக்கூடாது. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகஅரசு சட்டத்திருத்தம் மூலம் சமச்சீர் கல்வி திட்டத்தை கிடப்பில் போடும் எண்ணத்தில் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்துக்கு எதிராக இந்த அரசு பதவி ஏற்பதற்கு முன்பு எந்த எதிர்ப்பும் இல்லை. சட்டத்திருத்தம் என்பது சமச்சீர் கல்வியை அமல்படுத்த கொண்டு வரவில்லை. மாணவர்கள் நிலையை அரசு கருத்தில் கொள்ளவில்லை. மாணவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. 
  மாணவர்கள் கடந்த 2 மாதமாக பள்ளிகளுக்கு பாட புத்தகம் இல்லாமல் செல்வது பரிதாபமாக உள்ளது. அவர்களது ஏக்கத்தை பூர்த்தி செய்ய சமச்சீர் புத்தகம் உடனே தர வேண்டும். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்’’ என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘‘வக்கீல்கள் வாதம் முடிந்ததால் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறோம்’’ என்று அறிவித்தனர்.
         சமச்சீர் பாடப்புத்தகங்களை வரும் 5ம் தேதிக்குள் அரசு தர வேண்டும் என்ற உத்தரவையும் நீட்டித்து, வரும் 10ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று  அடுத்த கெடுவையும் நீதிபதிகள் விதித்தனர். கடந்த 6 நாட்களாக இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கின் விசாரணை 2 வாரம் 6 நாட்கள், 27 மணி நேரம் நடந்தது. 13 வக்கீல்கள் வாதாடினர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top