சேலத்தில் இரண்டு இடங்களில் நிலப்பறிப்பு தொடர்பாக,முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், நீதிமன்ற உத்தரவையடுத்து சேலம் குற்றப் பிரிவு போலீஸில் திங்கள்கிழமை காலை சரணடைந்தார்.
÷சேலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அங்கம்மாள் காலனியில், கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வந்த 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 2008-ம் ஆண்டு அங்கிருந்து இரவில் வெளியேற்றப்பட்டனர். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் மருத்துவமனை கட்டுவதற்காக, அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, அங்கு குடியிருந்தவர்களுக்கே தெரியாமல் நிலத்தை அபகரித்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் இங்கு மறுகுடியமர்த்தப்படவில்லை.
இந்நிலையில், அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்ட ஆட்சியரிடம் அங்கம்மாள் காலனி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரணை நடத்திய குற்றப் பிரிவு போலீஸôர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், பாரப்பட்டி கே.சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்ட 13 பேர் மீது கடந்த 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல், சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ரூ.80 கோடி மதிப்புள்ள பிரீமியர் மில் நிலத்தை மிரட்டிப் பறித்ததாகவும் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இரண்டு நிலப் பறிப்புகளிலும் முதல் குற்றவாளியாக (ஏ-1) சேர்க்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸôர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், 25-ம் தேதி காலை 10 மணிக்குள் குற்றப் பிரிவு போலீஸில் ஆஜராகி 3 நாள்கள் போலீஸôரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும்போது ஜாமீன் பெற்று வெளி வரலாம் என்றும் கூறி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சேலம் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள குற்றப் பிரிவு போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சரணடைந்தார்.
முன்னதாக போலீஸ் நிலையம் உள்ள சேலம் கடை வீதி, முதல் அக்ரஹாரம், தபால் நிலைய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. கமிஷனர் சொக்கலிங்கம், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தலைமையில் ஆயுதம் ஏந்திய சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
வீரபாண்டி ஆறுமுகம் சரண் அடைய இருப்பதை அறிந்ததும், நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள், முக்கியப் பிரமுகர்கள் போலீஸ் நிலையம் அருகில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் குற்றப் பிரிவு உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் காலை 10.30 மணி முதல் இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர் பதிலளித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதற்கு முன்னதாக வீட்டுக்கோ, மற்ற நபர்களை சந்திக்கவோ அவருக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் மாநகர துணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.
இதற்கிடையே, வீரபாண்டி ஆறுமுகத்திடம் போலீஸôர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காவல் நிலையம் அருகில் தீக்குளிக்க முயன்ற திமுக இளைஞரணி தொண்டர்கள் புத்திரகவுண்டம்பாளையம் மணிவண்ணன், வாழப்பாடி கலீல் அஹமது இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக