Ø யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரதத்தைக் கைவிட வைப்பதற்காக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
Ø ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புது தில்லியில் சனிக்கிழமை (ஜூன் 4) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாபா ராம்தேவ் அறிவித்தார்.
Ø சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக எழுச்சி ஏற்பட்டது.
Ø அதுபோன்றதொரு நிலை மீண்டும் ஏற்படாமலிருக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.
Ø இதற்கு முன்னர் நடந்திராத வகையில், பாபா ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 4 அமைச்சர்கள் குழுவினர் புது தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
Ø அதன்பின்னரும், உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என ராம்தேவ் அறிவித்தார்.
Ø இந்நிலையில், அவருடன் வியாழக்கிழமையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
Ø பத்திரிகையாளர் சந்திப்பு ஒத்திவைப்பு: உண்ணாவிரதம் தொடர்பாக பாபா ராம்தேவ் செய்தியாளர்களை வியாழக்கிழமை மாலை சந்திப்பதாக இருந்தது.
Ø ஆனால், அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதால், பேச்சு குறித்த விவரங்களை வெள்ளிக்கிழமை கூறுவதாக ராம்தேவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Ø காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஆலோசனை: இந்நிலையில், இப் பிரச்னையை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் வியாழக்கிழமை நடந்தது.
Ø இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Ø ஹஸாரே எச்சரிக்கை: பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் குறித்து சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே கூறியதாவது: ராம்தேவ் மேற்கொள்ளும் உண்ணாவிரதத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க உள்ளேன்.
Ø அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராம்தேவுடன் பேச அத்தனை அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டியதில்லை.
Ø பேசுவதற்கு ஓரிருவர் போதுமானது. அத்தனை பேர் சென்றதால், மோசடி செய்வதற்கு திட்டமிட்டுள்ளனரோ என எண்ணத் தோன்றுகிறது.
Ø ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, வாக்குறுதிகள் அளிப்பது, இவையெல்லாம் காலம்கடத்தும் செயல்கள் என்றார் ஹஸாரே.
Ø கோரிக்கைகள் என்ன?
Ø வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு அவசர சட்டம் இயற்றுதல், பறிமுதல் செய்யப்படும் பணத்தை தேசிய சொத்தாக அறிவித்தல், ஊழல்வாதிகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அளித்தல், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயம் செய்தல் குறித்தே அரசுடன் ராம்தேவ் பேசி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
Ø ஜேட்மலானி ஆதரவு: இதனிடையே, பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு பிரபல வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
செய்தி : தினமணி
கருத்துரையிடுக