கலைஞர் அரசின் ஒப்புதல் வாக்குமூலம் |
-க.ராஜ்குமார் |
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் கலை ஞரின் அரசு, ஊதிய மாற்ற ஆணைகளில் குளறுபடிகள் உள்ளன என ஒப்புக் கொண்டு, அவற்றை இரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் நிதித்துறை, 26.2.2011 தேதியிட்ட, அ.ஆ. நிலை எண்.71 ஆணையில், பத்தி 6ல் “ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகளினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சீரமைக்கும் வகை யில் அரசு விரிவாக ஆராய்ந்து இணைப்பில் குறிப்பிடப்பட் டுள்ள பணியிடங்களுக்கு ஊதிய விகித மாற்றங்களை செய்து அரசு ஆணையிடுகிறது” என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது. இந்த ஆணையில், வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை, நெடுஞ் சாலைத்துறை, ஊரக வளர்ச் சித் துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, தொழிற் சாலை ஆய்வகத்துறை, மாநில சுகாதார போக்குவரத்துத்துறை, மோட்டார் வாகன பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, போக்கு வரத்துத்துறை, மாற்றுத் திற னாளிகள் மறுவாழ்வு ஆணை யரகம், பேரூராட்சிகள், மின் ஆய்வுத்துறை, சென்னை மாநக ராட்சி, இந்திய மருத்துவம் மற் றும் ஹோமியோபதி துறை என 18 துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் தொகுப்பு ஊதியம் மற்றும் தர ஊதியத்தை குறைத்தும், மாற்றியும் அரசு ஆணையிட்டுள்ளது. இணை இயக்குநர்களுக்கு ஊதியம் (யீயல க்ஷயனே) ரூ.37,400-67,000 தரஊதியம், (ழுசயனந ஞயல) ரூ.8,700 என வழங்கப்பட்டதை அதிரடி யாக ஊதியம் ரூ.15,600-39,100, தரஊதியம் ரூ.7,600 என குறைத்து ஆணையிட்டுள்ளது. எஸ்.மாலதி இ.ஆ.ப., தலை மையிலான அலுவலர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு ஊதிய மாற்ற ஆணை களை பிறப்பித்தபோது, அதில் முரண்பாடுகள் உள்ளன என் பதை சுட்டிக்காட்டிய ஒரே சங் கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இதற்காக அச்சங்கத் தின் பொறுப்பாளர்கள், முர சொலியின் வசவையும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதா யிற்று. முரசொலி, ஊருக்கெல் லாம் ஒரு வழி என்றால் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் களுக்கு ஒரு வழி எனவும், கட்டிய வீட்டிற்கு திருஷ்டி பூசணிக்காய் போன்றவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் தலை வர்கள் எனவும் கேலி செய்து எழுதியது. தற்போது வெளியிடப் பட்டுள்ள அரசு ஆணையில், பத்தி 3ல், 5-வது வரியில், “அலு வலர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு களை களைவதற்கு அரசு ஒரு நபர் குழுவை நியமித்து ஆணை கள் வெளியிட்டது” என அரசே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள் ளது. இதற்கு முரசொலி என்ன சொல்லப் போகிறது? ராஜிவ்ரஞ்சன் இ.ஆ.ப., தலைமையில் ஒரு நபர் குழு வினை அமைத்தபோது, அப் போதும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என அரசு ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்தது. முரண்பாடுகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக அரசு பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும் என அரசை கேட்டுக் கொண்டது. அதுவும் பலனற்றுப் போன நிலையி லேயே ஒரு நபர் குழுவின் அறிக் கையின் அடிப்படையில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. முரண்பாடுகளை களைவதற்கு பதிலாக முரண்பாடுகள் மேலும் அதிகரிப்பதற்கு அது வழி வகுத்தது. அலுவலர் குழு மற் றும் ஒரு நபர் குழுக்களின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்திதான் அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து இயக்கம் கண்டு இரத்தம் சிந்தியது. தற்போது மேற்கண்ட ஆணை (71) பிறப்பித்ததின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடவில்லை. ஊதியம் குறைக் கப்பட்ட பிரிவினர் ஏமாற்ற மடைந்து, கோபமடைந்துள் ளனர். அதுமட்டுமல்ல அரசு ஊழியர்களில் இன்னும் சில ருக்கு மத்திய அரசிற்கு இணை யான ஊதியமே வழங்கப்படாத நிலையில், சிலருக்கு மேம்படுத் தப்பட்ட ஊதியம் வழங்கப்பட் டிருப்பது, ஊழியர்களிடையே கோபத்தைக் கிளறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க சங்க நிர்வாகி களை அரசு நேரடியாக அழைத் துப் பேசி தீர்வு காண முன்வர வேண்டும். அலுவலர் குழுவும், ஒரு நபர் குழுவும் உருவாக்கியுள்ள பிரச் சனைகள் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இதைத்தான் அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த ஆணை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலை உருவான தற்கு ஒரு சில அதிகாரிகளே காரணமாவர். அரசிற்கு அவப் பெயரை உருவாக்கி, ஊழியர்க ளிடையே குழப்பத்தை உருவாக் கியவர்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றது? அரசு ஊழியர்கள் தங்க ளின் பணிக்காலத்தில், மேற் கொண்ட பணிகளினால், அர சிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு கருதினால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பணி ஓய்வு பெறுவதற்கு கூட அவர் கள் அனுமதிக்கப்படுவ தில்லை. அப்படியிருக்க, லட் சக்கணக்கான ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான ஆணை யில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய வர்களே என்பதை அரசு உண ருமா? அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க முன்வருமா? என அரசு ஊழியர்கள் எதிர் பார்க்கிறார்கள். thanks தீக்கதிர் |
About Author
The part time Blogger love to blog on various categories like Web Development, SEO Guide, Tips and Tricks, Android Stuff, etc including Linux Hacking Tricks and tips. A Blogger Template Designer; designed many popular themes.
Advertisement
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக